இந்த வலையதளத்தில்உள்ள நல்ல செய்திகள்என்னைச் சார்ந்தபல நண்பர்களுக்குசென்றடைய வேண்டும்என்ற நோக்கத்தில்தான்உருவாக்கப்பட்டது. இதுவரைநான் பதிவிட்டபதிவுகளும், இனிபதிவிடப்போகும்பதிவுகளும் எனதுசொந்த படைப்புகள்அல்ல. பல பதிவர்கள்எழுதிய நல்லபதிவுகளைத்தான்இங்கு தொகுத்துள்ளேன்.

புதன், 28 மே, 2014

13 உணவுப் பாதுகாப்பு சட்டம்... விவசாயிகளுக்கு உலை வைக்கும் திட்டம்!

 
உணவுப் பாதுகாப்பு சட்டம்... விவசாயிகளுக்கு உலை வைக்கும் திட்டம்!

‘60 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வாய் சோறுகூட கிடைக்காமல் கிடந்தவர்கள்இன்று பட்டினியில்லாமல்இருக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் உணவு பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

"இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான ஏழை மக்களின் பசியை போக்க எத்தனை மணிமேகலை வேண்டும்.அந்த வகையில்ஏழை மக்களின் பசியை போக்கமனிதாபிமானத்தோடு சோனியா காந்தி நடந்துகொண்டிருக்கிறார்என்று சோனியாவை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார் தி.மு.தலைவர்கருணாநிதி.


"விருப்புவெறுப்புகளை ஒதுக்கிவிட்டுப் பார்க்கும் நமது கண்ணோட்டத்தில்... உணவுப் பாதுகாப்புச் சட்டம்... ‘வாழும் மனிதர்க்கெல்லாம் வயிற்றுக்குச் சோறிடும் கருணைச் சட்டம்!" என்று வள்ளலார் ரேஞ்சுக்கு'அருட்பாபாடிக் கொண்டிருக்கிறார் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி.


60 ஆண்டுகளாக சோறு இல்லாமல் இருந்தவர்களுக்கு... இத்தனை ஆண்டுகள் கழித்து சோறு போடுவதே முதல் குற்றம்இந்தக் குற்றத்தைசெய்த.... இத்தனை ஆண்டுகளாக துணை நின்ற... அத்தனை அரசியல்வாதிகளுக்குமே 'கருடபுராணதண்டனைகள்கூட தரலாம்அப்படியிருக்க...ஆளாளுக்கு இவர்களே பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

உணவுப் பாதுகாப்பு என்பது உண்மையிலேயே உன்னதமான விஷயம்தான்ஆனால்இப்படியெல்லாம் சட்டத்தைப் போட்டு வைத்துவிட்டால்மட்டும் எங்கிருந்து வரும் உணவு பாதுகாப்பு?
இந்தியாவில் விவசாய உற்பத்தி என்பது தொடர்ந்து சரிந்தே கிடக்கிறதுவிளைநிலங்கள் தரிசாகபோடப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.அப்படியிருக்க... ஒவ்வொரு ஏழைக்கும் எந்த நிலத்திலிருந்து கோதுமைஅரிசிபருப்பு இதையெல்லாம் விளைவித்துக் கொடுக்கப் போகிறார்கள்சோனியாவும்... மன்மோகன் சிங்கும்ஒருவேளை அமெரிக்காவிலிருந்து வழக்கம் போல இறக்குமதி செய்வார்களோ?
எதையெடுத்தாலும் இறக்குமதி என்று போனதால்தான் நாடு இன்று நாசமாக போய்க் கொண்டிருக்கிறது என்று மன்மோகன் சிங் அரசே ஒப்புக்கொண்டிருக்கிறதுஇந்த நிலையில்மீண்டும் விளைபொருட்களை இறக்குமதி செய்ய துட்டுக்கு எங்கே போவார்கள்?
விவசாய வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் ஆண்டுதோறும் நகர்ப்புறவாசிகளாக மாறிக் கொண்டுள்ளனர்ஏன்கிராமங்கள்கூடநகர்ப்புறங்களாக வடிவெடுத்துக் கொண்டுள்ளனஅங்குள்ள மக்களும் விவசாய வேலைகளை செய்வதைவிடகொத்தனார்ஜவுளிக்கடை,மருந்துக்கடைஹோட்டல் தொழில் என்று மாறிக் கொண்டுள்ளனர்காரணம்நாள் முழுக்க வெயிலிலும்மழையிலும் காய்ந்து வயல்களில்வேலை செய்யவேண்டியுள்ளது.
ஆனால்அதற்குரிய பலன் இல்லைஅதேசமயம்மற்ற வேலைகளில் எளிதாக சம்பாதித்துவிட முடிகிறதுபிறகெப்படி விவசாயிகளும்...விவசாய தொழிலாளர்களும் விளைநிலங்களையே நம்பிக்கொண்டு காலத்தை ஓட்ட முடியும்?

'விவசாயிகள் விளைவிக்கும் பொருள்களுக்கு கட்டுப்படியான விலையைக் கொடுங்கள்என்று வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன்தலைமையிலான கமிட்டிபல ஆண்டுகளுக்கு முன்பே அறிக்கையை சமர்ப்பித்தும்இந்தக் குழுவை நியமித்த மத்திய அரசே அதைத் திரும்பிப்பார்க்கவில்லை.

கட்டுப்படியான விலை இல்லதாதால்... தொழிலாளர்களுக்கு ஓரளவுக்கு மேல் சம்பளமும் கொடுக்க முடியவில்லைஇதனால் நாடு முழுக்கவேவிவசாய தொழிலாளர் பற்றாக்குறை பந்திபோட்டு உட்கார்ந்திருக்கிறதுபோதாக்குறைக்குநூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டம் என்கிற பெயரில்,சுரண்டல் திட்டம் ஒன்று நடைமுறையில் இருக்கிறது.
இதன் காரணமாக பலர் சோம்பேறிகளாக மாறிக் கொண்டுள்ளனர்இந்தத் திட்டத்தை விவசாயத்துடன் இணைக்கலாம் என்று பேசிக் கொண்டேஇருக்கிறார்கள் (கேரளாவில் இப்படி விவசாயத்துடன் இணைத்து வெற்றிகரமாக இத்திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்). அதைச்செய்வதற்கும் மத்திய அரசு முனையவில்லை.
இப்படி ஒட்டுமொத்தமாக இந்திய விவசாயமே கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கும் சூழலிலும், 'விவசாயிகளே விளைநிலங்களை விட்டுவெளியேறுங்கள்என்று மன்மோகன் சிங் வகையறா... கூவிக் கொண்டிருக்கிறது.
எதற்குத் தெரியுமா... பன்னாட்டு நிறுவனங்களுக்கும் உள்நாட்டு பண முதலைகளுக்கும் அந்த நிலங்களையெல்லாம் பட்டா போட்டுக்கொடுத்துவிட்டுஅதில் கார்ப்ரேட் விவசாயத்தை நடத்தத்தான்அதன்பிறகுஇந்த கார்ப்பரேட் முதலாளிகள் வைத்ததுதான் சட்டம்என்றாகிவிடும்.
சிமெண்ட்இரும்புமருந்து என்று அவர்கள் நிர்ணயிக்கும் விலைக்கு வாங்குவதுபோலவிளைபொருட்களையும் அவர்கள் சொல்லும்விலைக்குத்தான் வாங்க வேண்டியிருக்கும்இன்றைக்கு விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலைக்கு உத்தரவாதம் தராத இதே அரசு... நாளைக்கு,இந்த கார்ப்பரேட் விவசாயிகள் விளைவிக்கும் கத்திரிக்காயை கிலோ 200 ரூபாய்க்கும்... முருங்கைக்காயை கிலோ 300 ரூபாய்க்கும் மறுபேச்சேஇல்லாமல் விலை கொடுத்து வாங்கி, 'உணவுப் பாதுகாப்புச் சட்ட'த்தை நிறைவேற்றுவார்கள்!

இதன் மூலமாக 'இறக்குமதி'யைத் தவிர்க்கலாம்ஆனால்இந்தியாவில் வாழ வழியில்லாமல் ஏகப்பட்ட விவசாய உயிர்கள் 'ஏற்றுமதிஆகஆரம்பித்துவிடுமேஅதைத் தடுக்கஎந்த 'மணிமேகலைபுறப்பட்டு வருவாரோ!
-ஜூனியர் கோவணாண்டி


உழவர் உலகம்posted toவேளாண்மை [Agriculture]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக