இந்த வலையதளத்தில்உள்ள நல்ல செய்திகள்என்னைச் சார்ந்தபல நண்பர்களுக்குசென்றடைய வேண்டும்என்ற நோக்கத்தில்தான்உருவாக்கப்பட்டது. இதுவரைநான் பதிவிட்டபதிவுகளும், இனிபதிவிடப்போகும்பதிவுகளும் எனதுசொந்த படைப்புகள்அல்ல. பல பதிவர்கள்எழுதிய நல்லபதிவுகளைத்தான்இங்கு தொகுத்துள்ளேன்.

புதன், 28 மே, 2014

23 எளிதில் மரம் வளர்க்க ஒரு சிறந்த உத்தி

1970 களின் பிற்பகுதியில் என் தந்தை இளம்தேயிலை நாற்றுகளுக்கு மூங்கில் வகையைசார்ந்த கணு இடைவெளி அதிகமுள்ள “ஓடைஎன்னும் துவாரமுள்ள குச்சியை வெட்டிஅதனை நாற்றின் வேருக்கருகே வைத்துகோடை காலத்தில் நீரூற்றி காப்பாற்றியதைநான் பார்த்திருக்கிறேன்நாள்பட அவைமக்கிவிடும் அதற்குள் செடி நன்கு வளர்ந்துவிடும்பின்னாட்களில் நாங்கள் தண்ணீர்பற்றாக்குறை மிகுந்த பகுதியில் வீடுகட்டியபோது அவர் எஞ்சிய மின்சாரகம்பிகளை நுழைக்க பயன்பட்ட குழாய்களை(PVC)மேற்கண்ட முறையில் உபயோகித்துஅருகிலிருந்த சாலை மரங்களுக்கும்,வீட்டிலுள்ள தென்னைமரங்களுக்கும் மிகசிக்கனமாக நீரைபயன்படுத்தி வளர்த்தார்.இன்று அவைகள் ஓங்கி வளர்ந்து மிகவும்பயனுள்ளதாக இருக்கின்றன.
இந்த முறையுடன் மேலும் சில உத்திகளைப்பயன்படுத்தி எளிதாக மரம் வளர்க்கலாம்.
குழியெடுத்து அதனுள் மக்கியஇலைதழைகளை கொஞ்சம் போடவேண்டும்இவை நீரை எளிதில் தக்கவைக்கவும்,உரமாகவும் பயன்படும் அல்லது Ec அளவுஒன்றுக்கும் குறைவான அளவிலுள்ளதென்னைநார் கழிவுகளையும்உபயோகிக்கலாம்பழைய அல்லதுஉபயோகமில்லாத 1 அல்லது 2 அங்குல விட்டமுள்ள குழாய்களை எடுத்து தேவையான நீளத்திற்கு வெட்டி அதனை குழியினுள் வைத்து பின்செடிகளை நடவேண்டும்கோடை காலத்தில் இந்த குழாய் வழியாக மிக குறைந்த அளவு நீர் ஊற்றினால் கூட போதும் நீர் வேர்பகுதிக்கு நேராகசெல்வதால் களைகள் தோன்றுவது குறைந்து நாற்றுக்கள் நன்கு வளரும்திரவ உரங்களையும் தரலாம்சொட்டு நீர் பாசன வசதியிருந்தால்அதனை குழாயினுள் வைத்தால் போதும்நீர் பற்றாக்குறையுள்ள இடங்களுக்கு மிகவும் ஏற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக