இந்த வலையதளத்தில்உள்ள நல்ல செய்திகள்என்னைச் சார்ந்தபல நண்பர்களுக்குசென்றடைய வேண்டும்என்ற நோக்கத்தில்தான்உருவாக்கப்பட்டது. இதுவரைநான் பதிவிட்டபதிவுகளும், இனிபதிவிடப்போகும்பதிவுகளும் எனதுசொந்த படைப்புகள்அல்ல. பல பதிவர்கள்எழுதிய நல்லபதிவுகளைத்தான்இங்கு தொகுத்துள்ளேன்.

புதன், 28 மே, 2014

15 ஒரு மாடு... ஓர் ஆண்டு... 75 ஆயிரம்... நம்பிக்கை தரும் நாட்டுமாடுகள்...!


பால்... அதிக பால்... என ஆசைப்பட்டுவெளிநாட்டு இனப் பசுக்களையும்... கலப்பினப் பசுக்களையும் தேடி ஒட ஆரம்பித்ததில்நம் நாட்டு இனப்பசுக்களை பலரும் மறந்தே விட்டார்கள்தற்போதுஇயற்கை விவசாயம் மீது உள்ள ஆர்வத்தால்பெரும்பாலானோர் நாட்டுப் பசுக்களைத் தேடிவாங்கி வளர்க்க ஆரம்பித்துள்ளனர்அவர்களில் ஒருவராக... கரூர் நகரைச் சேர்ந்த தொழிலதிபர் கணேசன்...

தமிழகத்தைச் சேர்ந்தப் பாரம்பரிய பசுக்களோடுவடமாநில இனங்களான சாஹிவால்தார்பார்க்கர்கிர்காங்கிரேஜ்... போன்ற பசுக்களையும்,முர்ரா ரக எருமைகளையும் வளர்த்து வருகிறார்.
கரூர்-தாராபுரம் சாலையில் 15-வது கிலோ மீட்டரில் இருக்கிறதுசெல்லாண்டிப்பாளையம்பிரதான சாலையில் இருந்து இடதுபுறம் பிரியும்மண்சாலையில்இரண்டு கிலோ மீட்டர் தூரம் பயணித்தால்... கணேசனின் பண்ணைமண்சாலையில் இரண்டு பக்கமும் உயிர்வேலியாக நீண்டுகிடக்கின்றனகிளுவைச் செடிகள்அதில்பிரண்டையும்கோவைக் கொடியும் படர்ந்து கிடக்கின்றனபண்ணையில் இருந்த கணேசனிடம்அறிமுகப்படுத்திக் கொண்டதும் உற்சாகமாகப் பேசத் தொடங்கினார்.

''
இது எங்க பூர்வீக இடம்மொத்தம் 32 ஏக்கர்இதுல 17 ஏக்கர் மானாவாரி மேய்ச்சல் நிலம். 10 ஏக்கர்ல மாடுகளுக்குத் தேவையான பசுந்தீவனம்இருக்கு. 5 ஏக்கர்ல தென்னை இருக்குமுழுக்க முழுக்க கிணத்துப் பாசனம்தான்பக்கத்துல அமராவதி ஆறு இருக்குஅரசு அனுமதியோடஆத்துத் தண்ணியையும் கொண்டு வந்து பாசனம் செய்றதால... தண்ணி பிரச்னை கிடையாது.
தொழிலிருந்து தோட்டத்துக்கு!
சின்ன வயசுலேயே கரூர் போயிட்டேன்இருந்தாலும்அடிக்கடி ஊருக்கு வந்து பூர்வீக மண்ணைப் பார்க்கும்போது... பாட்டன்பூட்டன் செஞ்சவிவசாயத்தை நாமளும் செய்யணும்கிற ஆசை... மனசுக்குள்ள வந்து உக்கார்ந்துக்கும்இன்னிக்கு பரபரப்பான தொழிலதிபரா இருந்தாலும்,விவசாய ஆர்வம் என்னை விடலஒரு கட்டத்துல கம்பெனிய பசங்ககிட்ட ஒப்படைச்சுட்டுமுழுநேர விவசாயியா மாறிட்டேன்பரம்பரையாஎங்க தோட்டத்துல காங்கேயம் மாடுகளதான் வளர்ப்போம்நான் விவசாயத்துல இறங்கினதும்வேலாயுதம்பாளையத்துல நடந்த நம்மாழ்வார்கூட்டத்துல எதேச்சையா கலந்துகிட்டேன்.
அந்தப் பயிற்சியில, 'இயற்கை விவசாயம்தான் மண்ணுக்கும் மனுஷனுக்கும் ஏத்துனு தெரிஞ்சுட்டேன்பிறகுதிண்டுக்கல்ல நடந்த சுபாஷ்பாலேக்கரோட 'ஜீரோ பட்ஜெட்’ பயிற்சியிலயும் கலந்துக்கிட்டேன்அங்கதான்நாட்டுமாடுகளோட மகிமையையும்இயற்கை இடுபொருட்கள்தயாரிக்கற முறைகளையும் தெரிஞ்சுக்கிட்டேன்.
தீவனம் இல்லாமல் மாடு வாங்கக் கூடாது!
ஆரம்பத்துலபயிர்களுக்குத் தேவையான இடுபொருள் தயாரிக்கறதுக்காகத்தான் நாட்டு மாடுகளை வளர்க்கலாம்னு முடிவெடுத்தேன்அதுக்காக, 10 ஏக்கர்ல பசுந்தீவன சாகுபடியை ஆரம்பிச்சேன்ஒரே ரகமா இல்லாம.... கோ-4, வேலிமசால்கோ.எஃப்.எஸ்-29, கிளரிசீடியாசவண்டல்(சுபாபுல்), மல்பெரிமுயல் மசால்னு பல ரகமா இருக்குற மாதிரி பாத்துக்கிட்டேன்அதுக்கப்பறம்தான்மாடுகளை வாங்க ஆரம்பிச்சேன்.

'
வெறுமனே இடுபொருளுக்காக மட்டும் இல்லாமபால் விற்பனையும் செஞ்சா லாபகரமா இருக்குமேனு தோணுச்சுகாங்கேயம் பசுக்களைமட்டும் வெச்சு பால் உற்பத்தியை அதிகப்படுத்த முடியாதுஅதே நேரத்துலகலப்பினப் பசுக்களை வாங்கி பால் வியாபாரியா மாறவும் எனக்குமனசில்லை. 'என்ன பண்ணலாம்?’னு ரொம்பத் தீவிரமா யோசிச்சுக்கிட்டிருந்தேன்அந்த சமயத்துலதான், 'வாழப்பாடி’ மணிசேகர் எனக்குஅறிமுகம் ஆனார்அவர்தான், 'கலப்பினப் பசுக்களைப் போலவே அதிகம் பால் கறக்குற நாட்டுப் பசுக்களும் இருக்குனு சொன்னாருஉடனடியாஅலைஞ்சு திரிஞ்சு அந்த இன மாடுகளை வாங்குனேன்'' என்ற கணேசன்மாட்டுத் தொழுவத்துக்கு நம்மை அழைத்துச் சென்றார்.
எருமை எதையும் கழிக்காது!
நல்ல காற்றோட்டத்துடன் சிமெண்ட் தரைதளத்துடன் இருந்த தொழுவத்தில் ஒரு வரிசையில் பசுமாடுகளும் எதிர் வரிசையில் எருமைமாடுகளும் கட்டப்பட்டிருந்தனதொழுவத்தில் நடந்து கொண்டே பேச ஆரம்பித்தவர், 'தொழுவத்தை 60 அடி நீளம், 30 அடி அகலம், 20 அடிஉயரத்துல அமைச்சுருக்கேன்.
ஆரம்பத்துல பசு மாடுகளை மட்டும்தான் வாங்கலாம்னு இருந்தேன்சிலர், 'எருமைப்பால்ல கொழுப்புச் சத்து அதிகம் இருக்கும்அதனாலபாலுக்கு நல்ல விலை கிடைக்கும்னு சொன்னாங்கஅதனால எருமைகளையும் வாங்க ஆரம்பிச்சேன்எருமை மாடுபசுந்தீவனம்அடர்தீவனம்எல்லாத்தையும் கழிக்காமத் திங்கும்அதுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமா இருக்கறதாலமருத்துவச் செலவும் குறையுதுஇப்போ... என்கிட்ட 7காங்கேயம், 6 கிர், 4 தார்பார்க்கர், 4 காங்கிரேஜ், 4 சாஹிவால், 25 முர்ரா எருமைகள்னு மொத்தம் 50 உருப்படிக இருக்கு'' என்றவர்வருமானத்தைப்பற்றிச் சொல்லத் தொடங்கினார்.
ஒரே ஈத்துல எடுத்துடலாம்!

'
வடமாநில மாடுகளோட விலை அதிகமா இருந்தாலும்போட்ட பணத்தை ஒரே ஈத்துல எடுத்துடலாம்உதாரணமா... சாஹிவால் பசுவை 75ஆயிரம் கொடுத்து வாங்கினேன்இதுவருஷத்துக்கு 305 நாள் பால் கறக்குதுசராசரியா ஒரு மாட்டுல இருந்து 4 ஆயிரம் லிட்டர் பால் ஒருவருஷத்துல கிடைக்குது.
நேரடியா நுகர்வோருக்கு ஒரு லிட்டர் 30 ரூபாய்னு விக்கிறேன். 4 ஆயிரம் லிட்டர் பால் மூலமாஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வருமானமாகிடைக்குதுஇதுல தீவனம்பராமரிப்புச் செலவு போக,
75 
ஆயிரம் ரூபாய் லாபம்ஆகஒரு ஈத்து முடிஞ்சதுமே... மாடும்கன்னும் லாபக் கணக்குல சேர்ந்துடுதுஇதேமாதிரி அம்பது மாட்டுக்குகணக்குப் போட்டுக்கோங்க...'' என்ற கணேசன் நிறைவாக,
'
ஜீவாமிர்தம் மாதிரியான இடுபொருட்கள் பயன்பாட்டுக்காக காங்கேயம் பசுக்களையும் வளக்குறேன்இதுல பால் மூலமா வருமானம்இல்லைன்னாலும்கன்று விற்பனை மூலமா வருஷத்துக்கு ஒரு தொகை கிடைச்சுடுதுஆக மொத்தத்துல நாட்டு மாட்டு இனங்களைக் கலந்துவளத்தா... நிச்சயம் நல்ல லாபம் பார்க்கலாம்ஆரம்பத்துல எல்லா இனத்திலும் ஒவ்வொரு மாட்டை மட்டும்தான் விலை கொடுத்துவாங்கினேன்இடையில் சில கன்றுகளை வித்தது போக இப்பகிட்டத்தட்ட 20 லட்சம் ரூபாய் மதிப்புக்கு 50 மாடுக இருக்கு.
இப்போநாட்டுப் பசுக்களோட பாலுக்கு அதிக தேவை இருக்கறதால... நாட்டு மாடுகளை வளத்து பாலை நேரடி விற்பனை செஞ்சா கண்டிப்பாநல்ல லாபம் பாக்க முடியும்'' என்று நம்பிக்கையூட்டி விடை கொடுத்தார்.
செலவில்லாமல் உணவு!
பண்ணையில் கிடைக்கும் சாணத்தை வைத்துசாண எரிவாயு தயாரிக்கிறார் கணேசன். ''சாண எரிவாயுத் தயாரிப்புக்காக 25 கன மீட்டர் அளவுகொண்ட தொட்டியை அமைச்சுருக்கேன்இதிலிருந்து வெளியேறுற எரிவாயுவைப் பயன்படுத்தித்தான்பண்ணையில் தங்கி வேலை செய்யுறஅஞ்சு குடும்பங்களுக்கு உணவு தயாரிக்கிறோம்இதிலிருந்து வெளிவர்ற சாணக் கழிவுகளை (ஸ்லர்ரிசிமென்ட் தொட்டிகள்ல நிரப்பி,ஜீவாமிர்தமா மாத்திபாசனத் தண்ணியில கலந்து 10 ஏக்கர் பசுந்தீவனப் பயிர்களுக்கும், 7 ஏக்கர் தென்னைக்கும் தொடர்ந்து கொடுத்துட்டுவர்றேன்சாண எரிவாயுவைப் பயன்படுத்தி ஆயில் இன்ஜினை இயக்குற முயற்சியிலயும் இருக்கேன்'' என்று சொன்னார் கணேசன்.
தொடர்புக்குசிகணேசன்,
செல்போன்: 98652-09217.

தகவல்பசுமை விகடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக